Thursday 2nd of May 2024 02:58:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரம்: கோட்டாவுக்கான கடிதம் முற்றுப் பெற்றது!

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் விவகாரம்: கோட்டாவுக்கான கடிதம் முற்றுப் பெற்றது!


5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து துளி நீர் கூட அருந்தாது 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வலியுறுத்தி கோட்டாவுக்கு அனுப்ப உள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளின் தரப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதற்கான தடைகளை விலக்கக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் கையொப்பமிட்டனர்.

தியாகி திலீபன் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறுவதற்கான தடையை இலங்கை அரசாங்கம் விலக்க வேண்டும் என நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டதில் தீர்மானிக்கப்பட்டது.

அத் தீர்மானத்தினத்தினை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதமுலம் அனுப்பப்படவற்காக இன்று மீளவும் தமிழ் கட்சிகள் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ வீ கே சிவஞானம் அலுவலகத்தில் ஒன்றுகூடினர்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகியவற்றின் சார்பில் கையொப்பமிடப்பட்டுள்ளது.

நீண்ட காலத்தின் பின்னர் உரிமைசார் விடயத்தை முன்னிறுத்தி தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுவரும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக முன்னெடுப்பை மேற்கொண்டு வருவது அவதானிகள் மட்டத்திலும், பொது மக்கள் தரப்பிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: மாவை சோ.சேனாதிராஜா, இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE